தஞ்சாவூர், கும்பகோணத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என உளமாற உறுதி ஏற்கிறேன் என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தஞ்சாவூர்: டாக்டர் அம்பேத்கரின் பிறந்தாளை ஒட்டி தஞ்சையில் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட பட்டியல் அணி தலைவர் விக்னேஷ் குமார் ராஜா தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முரளி, ஐ.டி.பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, பட்டியல் அணி பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணா, பிரபு, மாவட்ட செயலாளர்கள் தர்மா, திருமலை, கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க சக்தி வடிவேல், மருத்துவ அணி டாக்டர் பாதிமோகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், இளைஞரணி மாவட்ட தலைவர் அருண், தொழில்துறை பிரிவு பொன். மாரியப்பன் மற்றும் பலர் ஏராளமான கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார்.
நில உரிமை மீட்பு மாநில பொதுச் செயலாளர் வீரன். வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாநகரச் செயலாளர் தமிழ் அமுதன், சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலாளர் சிவா தமிழ் நிதி, மாவட்ட இணைச்செயலாளர் இடி முரசு இலக்குணன், ஒன்றிய செயலாளர்கள் வினோத், பாரத், ஜான் மற்றும் விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலையில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு, ஈ.பி.காலனி, பால்பண்ணை, ஆர்.எம்.எஸ். காலனி வழியாக தாரைப் தப்பட்டையுடன் வருகை தந்து அம்பேத்கர் வாழ்க, அவரது புகழ் ஓங்குக என கோஷங்களும் முழங்க அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம், சக மனிதர்களை சாதியின் பெயரால் அடையாளம் காண மாட்டேன், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என உளமாற உறுதி ஏற்கிறேன் என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார், துணை மேலாளர்கள் ராஜா, சிங்காரவேலு, முரளி கணேசன், உதவி மேலாளர்கள் செந்தில்குமார், ஆனந்தன், வெங்கடேசன், வேலுமணி, நாகமுத்து, ரமேஷ், ராஜசேகர், வடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.