மேலும் அறிய

தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

’’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள  அய்யன் குளம் 5 கோடி  மதிப்பில் சீரமைப்பட்டு வருகின்றது’’

மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக சுமார் 1289 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டியாகும் நகரப்பகுதியில் குடிநீர், வடிகால், பழமையான குளங்கள், நீர் நிலைகள், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், ரோடு வசதிகள், சரித்திர புகழ்வாய்ந்த இடங்கள், அரண்மனை மற்றும் புராதன கட்டிடங்கள் இருப்பதால், அதனை பழைய மாறாமல் அப்படி பழைய நிலையைும் மாற்றாமல், நவீன முறையில் மாற்றி முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றுவது தான் ஸ்மார்ட் சிட்டியாகும்.

தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

புராதன நகரமான தஞ்சையில் நீராதாரத்துக்காக மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல ஆக்கிரமிப்பு காரணமாகப் படிப்படியாக மறைந்தன. தஞ்சை நகரை ஆண்ட மன்னர்கள், காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக, பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ரகுநாத நாயக்க மன்னர் கட்டிய குளங்களில், தஞ்சாவூர் மேலவீதியிl உள்ள அய்யங்குளமும் ஒன்று. இக்குளத்திற்கு சுற்றிலும் சுடுமண் செங்கல்களால் இந்த நீர்வழிப்பாதை 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 300 மீட்டரில் இருந்து மட்டுமே தண்ணீர் சென்றது. தற்போது சிவகங்கை பூங்கா அருகே மேலவீதிக்கு திரும்பும் இடத்தில் இருந்து 800 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுரங்க நீர்வழிப் பாதையில் 9 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளான, அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.

தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

பின்னர் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் நீர் ஆதாரத்திற்காக பிரமாண்டமான வகையில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது. இந்த குளத்தில் இருந்து மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நீர்வழிப்பாதை நாளடைவில் செயலற்று விட்டது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள  அய்யன் குளம் 5 கோடி  மதிப்பில் சீரமைப்பட்டு வருகின்றது.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் அவை கடமையாற்ற காத்திருக்கின்றன. இவற்றின் பாதாள வழித்தடங்கள் தற்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நீர் கட்டமைப்புகள் முடங்கி கிடக்கின்றன. தஞ்சை பெரிய கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள சிவகங்கை பூங்காவில் சிவகங்கை குளம் உள்ளது. இந்த குளம் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தஞ்சை நகரில் உள்ள குளங்களில் இந்த ஒரு குளம் மட்டுமே பராமரிப்பில் உள்ளது. தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம்  கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன் குளத்தை சீரமைக்க 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குளத்தின்  4 புறமும் உள்ள படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் அழங்கார மின்விளக்குகள், நடுவில் நீராழி மண்டபம், அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள், பொது மக்கள் குளத்தில் பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்காக, குளத்தை சுற்றிலும், சில்வரினால் குழாய்கள், ஆயகலைகள் 64 வகையான ஒவியங்கள், பொது மக்கள் கவரும் வகையில், விவசாய தொழிலான கதீர்கள், வாழை பழத்தார்கள்,  கரும்பு உள்ளிட்டவை நவீன வர்ணம் மூலம் ஒவியமாக வரைந்துள்ளனர். ரகுநாத நாயக்க மன்னர் அமைத்த அய்யன் குளத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget