அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
’’தமிழ்நாட்டின் நலனிலும் வளத்திலும் என்றைக்குமே திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை’’
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிக்களில் கலந்த கொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருந்தார், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,திமுக ஆட்சிக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள், வந்த பிறகு மறந்து விடுவார்கள், 7 பேர் விடுதலை ஆக இருக்கட்டும் சிறுபான்மையினரின் நலன் ஆக இருக்கட்டும் நாங்க தான் மக்களுக்கு காவலன் என்று ஏமாற்றுவார்கள். திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என்று நம்பி மக்களும் வாக்களித்தார்கள், ஆனால் மக்கள் ஏமாந்து வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை என்பது இந்த ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிகிறது.
பைக்கை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி - முதியவரிடம் இருந்து 6 லட்சம் அபேஸ்
ஆட்சியில் இருந்த போது மத்திய அரசை எதிர்த்து வீர வசனம் பேசி, கருப்பு கொடி காட்டுவார்கள், அதிமுக அரசின் அப்போதைய கவர்னர் ஆய்வு செய்த போது கருப்புக்கொடி காண்பித்த திமுகவினர் தற்போது ஆட்சிக்கு வந்ததால் அமைதியாக செல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் திமுகவை சேர்ந்தவரிகளின் குடும்பம், அவர்களைச் சேர்ந்தவர்களின் குடும்பம் மட்டும் வளமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் நலனிலும் வளத்திலும் என்றைக்குமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. மக்களிடையே மன்னிப்பு தன்மையை இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை’ - தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு பேட்டி
அதிமுகவில் நடந்த ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கேலிக்கூத்தாக ட்ராமா போல் நடந்து முடிந்துள்ளது, அவர்கள் உட்கட்சி சண்டையில் அவர்களை தலைமை கழகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை தாக்கியுள்ளார்கள். அவர்களது உட்கட்சி சண்டையின் காரணமாக அம்மாவுடைய நினைவு நாள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அடிதடியில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை ஏவல் துறையாக நடந்துள்ளது. அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறது என்றார். தொடர்ந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதுார் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிக்கு சென்றார்.
நரிக்குறவர்களை அரசுப்பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட விவகாரம்-நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்
ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்தது ஏன்?’ - வீடியோ எடுத்த போட்டோகிராபர் அளித்த பேட்டி
திருவிடைமருதுார் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசுகையில், அமமுகவில் உள்ள உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அந்தந்த பகுதியில் வழிநடத்தி கொண்டிருக்கின்றார்கள். அம்மாவின் உண்மையான ஆசையை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் இயக்கம் அமமுக மட்டும் தான். தேர்தல் தோல்வியை கண்டு அம்மாவின் உண்மை விசுவாசிகள், அமமுக தொண்டர்கள் என்றும் துவண்டு விடமாட்டார்கள் என்றார். முன்னதாக குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உருவ படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மலர அஞ்சலி செலுத்தினார்.