மேலும் அறிய

75வது சுதந்திர தினம்: இல்லம்தோறும் தேசியக்கொடி கொடுத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்

தொடக்க நாளான பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இல்லங்கள் தோறும் 600க்கும் மேற்பட்ட தேசிய கொடிகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வை துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக இந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றி பொதுமக்கள் தங்கள் தேச பக்தியினை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவை இல்லம் தோறும் தேசியக்கொடியை பொதுமக்கள் இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக இந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்கிற முன்னெடுப்பை மத்திய அரசு நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்க உள்ளனர்.

75வது சுதந்திர தினம்: இல்லம்தோறும் தேசியக்கொடி கொடுத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்

தொடக்க நாளான பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இல்லங்கள் தோறும் 600க்கும் மேற்பட்ட தேசிய கொடிகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வை துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அவர் பண்ணை வளாகம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியினை கொடுத்து அதனை வீடுகளில் ஏற்றி வைக்க வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கேந்திர வித்யாலயா மாணவர்கள் இணைந்து ஆதமங்கலம் நாககுடி சக்கரமங்கலம் தியாகராஜபுரம் நீலக்குடி பெரும்புகளூர் கருணாகர நல்லூர் போன்ற கிராமங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசியக் கொடியினை அளித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

75வது சுதந்திர தினம்: இல்லம்தோறும் தேசியக்கொடி கொடுத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்

முன்னதாக இதன் தொடக்க நிகழ்வு பண்ணை வளாகம் பேராலயத்தில் நடைபெற்றது. அதில் தேசிய கொடியின் முக்கியத்துவத்தையும் அதை வீடுகளில் ஏற்ற வேண்டிய அவசியத்தையும் துணைவேந்தர் கிருஷ்ணன் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள் மாணவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில்  பூஸ்டர் தடுப்புசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு தேசியக்கொடியினை அளித்து அவர்களது வீடுகளில் ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மத்திய பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலத்தில் இருந்து மத்திய பல்கலைக்கழகம் வரை  மினி மராத்தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மத்திய பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும்  ஊழியர்களின் குழந்தைகள் பங்குபெறும் மாறுவேடப் போட்டி நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர்களின் உருவங்களில் மாணவர்கள் வேடம் தரிக்க உள்ளனர். மேலும் சுதந்திர தினத்தன்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் மரியாதை செய்யப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget