மேலும் அறிய
Advertisement
இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கியதில் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு காயம்
நாகை அருகே ஆரியநாட்டுத்தெரு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி அரிவாளால் வெட்டியதில் 4 பேர் படுகாயம்
நாகை அருகே ஆரியநாட்டுத்தெரு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி அரிவாளால் வெட்டியதில் 4 பேர் படுகாயம் இருவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரியிலும் இருவர் வேதாரணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த சேர்ந்தவர் சுப்புராஜ் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த
வசந்தபாலன், நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களும் நேற்று மதியம் நாகையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற் கொள்ளையர்கள் இரண்டு படகில் 8 பேர் வந்து திடீரென்று இவர்களின் படகில் ஏறி மீனவர்களை அரிவாளால் கண்மூடித்தனமாக மணிவண்ணன், வசந்தபாலன், நிர்மல், தில்லை நாதன் ஆகிய 4 மீனவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். பின்பு படகில் இருந்த 60 ஆயிரம் மதிப்புடைய மீன்கள், 2 செல்போன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள், படகு இன்ஜின் உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டனர்.
நெல்லை வரும் நயினார் நாகேந்திரனுக்கு கருப்பு கொடி காட்டுவோம் - அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம்
காயம்பட்ட 4 மீனவர்களும் அவசரம் அவசரமாக அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றனர். படகின் உரிமையாளர் மகன் வசந்தபாலன்னுக்கு கை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது மற்றும் நிர்மலுக்கும் காயம் ஏற்பட்டது இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தில்லைநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு நாளில் அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குவது நாகை மாவட்ட மீனவர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion