மேலும் அறிய

கந்துவட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை உறுதி - தஞ்சை எஸ்.பி ரவளிப்ரியா எச்சரிக்கை

''வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் குற்றமாகும். தனி உபயோகத்துக்காக 12 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலித்தால் குற்றம்''

தஞ்சாவூர் காவலர் பயிற்சி வளாகத்தில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி பேசுகையில், தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) மிக அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கறாரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

கந்துவட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை உறுதி - தஞ்சை எஸ்.பி ரவளிப்ரியா எச்சரிக்கை

இந்த அவசர சட்டத்தின் கீழ், மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் குற்றமாகும். தனி உபயோகத்துக்காக 12 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலித்தால் குற்றம். அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 30,000 வரை அபராதமும் விதிக்கப்படும். வட்டிகாரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில்  தொடர்புடையவர் 15 நாள்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். கடன் பெற்றவர் செலுத்த வேண்டிய தொகையை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும். கடன் பெற்றவரின் அசையும், அசையா சொத்துகளை வசூலிப்பவர் கையகப்படுத்தியிருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும். கடன்  அளிக்கும் தொழில் செய்ய விரும்பும் நபர் தொடர்புடைய வட்டாட்சியரிடம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். கந்து வட்டி பிரச்னையால் யாராவது தற்கொலை செய்ய நேர்ந்தால், தற்கொலைக்கு தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து, கந்து வட்டி வசூலிப்பதற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வி. ஜெயச்சந்திரன் (தலைமையிடம்), கென்னடி (சைபர் கிரைம்), ரவீந்திரன் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு),  டிஎஸ்பி கபிலன், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget