திருச்சியிலிருந்து 1327 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அலைமோதும் மக்கள் கூட்டம்
திருச்சி நகரத்திற்குள்ளும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்: பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வரும் மக்கள் கூட்டம் பேருந்திற்காக அலைமோதுகிறது.
பண்டிகை காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதும், உறவினர்களைச் சந்திப்பதும் வழக்கம். இதனால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்டத்தைச் சமாளிப்பதற்காகவே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களுக்காகவே இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பண்டிகை காலத்தில் பிற மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இதனால் வழக்கத்தை விட அதிகளவில் பயணிகள் கூட்டம் இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் வெகுவாக குறைவதோடு மக்கள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இருப்பினும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் பேருந்து கிடைக்காமல் மக்கள் அலைமோதுகின்றனர்.
திருச்சியில் பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம், சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல், பல்வேறு நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த பேருந்து முனையமான பஞ்சப்பூரில் இருந்து, நாளை 15ம் தேதி வரை சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,327 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்சி நகரத்திற்குள்ளும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவை தவிர, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களுக்கு சுமார் 405 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்க பணமில்லா UPI கட்டண முறையைப் பயன்படுத்தும்படி பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த சிறப்புப் பேருந்து சேவை, பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். வழக்கமான பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு, இந்த சிறப்புப் பேருந்துகள் ஒரு நல்ல மாற்றாக அமையும்.
மேலும், பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் எளிதாகவும், வேகமாகவும் டிக்கெட் வாங்க உதவும். பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகள், பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு சிரமமின்றி பயணிக்கவும் உதவும். கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கடந்த 2 நாட்களாக வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
பயணிகள், தங்களுக்குத் தேவையான இடங்களுக்குச் செல்ல, இந்த சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை பேருந்து நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம். பண்டிகை காலங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ோக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் நெரிசலில் அதிகளவில் உள்ளது. மேலும் அதிகாலை முதல் பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்ல பேருந்து இல்லாமல் அலைமோதுகின்றனர். இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மேலும் பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















