மேலும் அறிய

வெட்டாற்றில் அகற்றப்படாத கோரைகள்-1000 கிராமங்களில் 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் அழியும் அபாயம்...!

’’இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக அரசு மூன்றாண்டுக்கு ஒரு முறை துார் வார வேண்டும் என்று உத்தரவு இருக்கின்றது. அதனை மாற்றி ஆண்டு தோறும் துார் வாருவதற்கு உத்தரவிட வேண்டும்’’

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் பகுதியில் உள்ள வெட்டாறு முழுவதும் கோரைகள் மண்டி  ஆறே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நுாறு ஏக்கருக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயத்தொழிலே அழியும் நிலை உருவாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெட்டாறு, தென்பெரம்பூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில், வடவாறும், வெட்டாறும் பிரிகின்றது. இந்த வெட்டாறு  அங்கிருந்து அரசூர், நெடார், திருக்கரூகாவூர், திருவாரூர் மாவட்டத்தில் ஊத்துக்காடு, சேரி பாலம்,செல்லுார் அணக்கட்டு,கொரடாச்சேரி பாலம் , எண்கண் ஷெட்டரில் ஒடம்போக்கி ஆறு பிரிந்து விடுகிறது.

பின்னா் வெட்டாறு நாகூர் பகுதியில் கடலிலும், ஒடம்போக்கி ஆறு  சிக்கல் வழியாக  உப்பனாறாகமாறி, கடுவையாற்றில் கலந்து நாகை துறைமுகம் பகுதியில் கடலில் கலக்கின்றது. இந்த வெட்டாற்றினால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 200 கிராமங்களும்,  திருவாரூர் மாவட்டத்தில் 300 கிராமங்களும், நாகப்பட்டிணம் சுமார் 500 கிராமங்கள் உள்ளிட்ட சுமார் 1000 கிராமங்களில், சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சாகுபடி பரப்பளவும் (ஆயக்கட்டு) இருந்து வருகின்றது. இந்நிலையில் வெட்டாற்றில் தலைப்பிலிருந்து கோரைகள் மண்டியும், காட்டாமணக்கு செடிகள் மண்டியில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

வெட்டாற்றில் அகற்றப்படாத கோரைகள்-1000 கிராமங்களில் 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் அழியும் அபாயம்...!

திருக்கரூகாவூர், நெடார் கிழ் பகுதி, ஊத்துகாடு, வையச்சேரி பகுதியில் உள்ள ஆறு முழுவதும் கோரைகள் மண்டி ஆறு தெரியாத வகையில் இருந்து வருகிறது. போல் தலைப்பிலிருந்து முக்கால் வாசிபகுதி கோரைகளாக மண்டியிருப்பதால் தண்ணீர் வந்தாலும் விவசாயத்திற்கு பயன்படாமல் அருகில் உள்ள வாய்க்கால்கள், ஒடைகளில் புகுந்தும், தேவையில்லாத இடத்தில் பாய்ந்து விடும். இதனால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் வரும் மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெட்டாற்றில் உள்ள கோரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் விவசாயத்திற்கு பயன் பெறும் வகையில் பணிகளை மேறகொள்ள வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து  வெட்டாற்றின் தண்ணீரை பாசனத்திற்காக பயன்படுத்தும் சீனிவாசன் கூறுகையில், வெட்டாற்றில் துார் வாரி 6 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பொதப்பணித்துறையினர் துார் வாரினாலும் ஆற்றில் நானல்கள், கோரைகள் மண்டி விடுகிறது. இதனால் ஆறு முழுவதும் துார்ந்து ஒடையாகி விட்டது. மேலும் வெட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாலும், மணல்கள் இல்லாமல், மண் திட்டுகளாகி விட்டது. அதலும் செடிகள், கோரைகள் நானல்கள் முளைத்து விடுகிறது.

வெட்டாற்றில் அகற்றப்படாத கோரைகள்-1000 கிராமங்களில் 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் அழியும் அபாயம்...!

இந்நிலையில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. அதிகமாக மழை பெய்தால் ஆற்றில் தண்ணீர் வரும் போது போவதற்கு வழியில்லாமல், கரைகளை உடைத்து கொண்டு பக்கத்தில் கிராமங்களில் புகுந்து விடும். வெட்டாற்றில் கரைகளில் சுமார்  1000 கிராமங்கள் உள்ளதால், அவைகளின் நிலை கேள்வி குறியாகி விடும். வெட்டாற்றினால் மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பளவு உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும், முறையாக செல்ல வழியில்லாததால், கரைகளின் பக்கங்களில் உள்ள வாய்க்கால்கள், ஒடைகள், குட்டைகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் சென்று விடும்.

இது போல் பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் வெட்டாற்றினால் பயன்பெறும் கிராமங்களில் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெட்டாற்றில் தண்ணீர் முறையாக மூன்று மாவட்டங்களிலும் செல்ல வேண்டுமானால், பொதுப்பணித்துறையினா், வருவாய்த்துறையினா், காவல்துறையினா் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை  சார்ந்தவா்களும், ஆற்றில் மணல் எடுப்பதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இனி வருங்காலத்தில் தண்ணீர் இல்லாமல் அனைத்து விவசாயமும் பாழாகும்.

 ஆற்றில் மணல் இருக்கும் வரை எந்த செடி, கோரைகள், நானல்கள் முளைக்காது, ஆனால் அதே ஆற்றில் மணல் முழுவதும் எடுத்து விட்டால் அடியில் உள்ள மண்ணை கொண்டு செடிகள், கோரைகள் மண்டி விடும். மாவட்ட நிர்வாகம் வெட்டாற்றில் துார் வாரினாலும், கடமைக்காக செய்வதால், கோரைகள் , நானல்கள் மண்டி ஆறே இருப்பது தெரியாமல், ஒடைபோல் உள்ளதை, முழுவதுமாக துார் வாரி ஒடையை ஆறாக மாற்றி, இனி வருங்காலத்தில் ஆற்றில் மணல் எடுப்பதை தடுத்திட வேண்டும், அப்படி இல்லை என்றால் வருங்காலத்தில் மூன்று மாவட்டங்கள்  முழுவதும் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்  இல்லாமலும் பாலைவனமாகும் என்றார்.

இது குறித்து ஒய்வு பெற்ற பொதுப்பணித்துறை அலுவலா் கூறுகையில், ஆற்றில் மணல் அதிக அளவில் அள்ளுவதால்தான் செடிகள், கோரைகள் மண்டுகின்றன. ஒரு முறைகோரை முளைத்து விட்டால், அதை அழிப்பது மிகவும் கடினம், எவ்வளவு தான் துார் வாரினாலும், சிறிய அளவில் விதைகள் இருந்தாலும் முளைத்து விடும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக அரசு மூன்றாண்டுக்கு ஒரு முறை துார் வார வேண்டும் என்று உத்தரவு இருக்கின்றது. அதனை மாற்றி ஆண்டு தோறும் துார் வாருவதற்கு உத்தரவிட வேண்டும். ஒரு முறை துார் வாரி விட்டு மறு வருடம் பார்த்தால் திரும்பவும் கோரைகள் முளைத்து விடும்.  இது போன்ற நிலைக்கு ஒரே தீர்வு, ஒரு நேரத்தில் போர்கால அடிப்படையில் அனைத்தை ஆறுகள், வாய்க்கால்களை தலைப்பிலிருந்து முடிவு வரை துார் வார வேண்டும். இல்லை என்றால் எத்தனை முறை துார் வாரினாலும் பயனில்லை என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget