சவரனுக்கு ரூபாய் 35 ஆயிரத்தை கடந்த தங்கம்
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 365க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.34 ஆயிரத்து 920க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.22 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4 ஆயிரத்து 387க்கு விற்கப்படுகிறது. இதனால், சவரனுக்கு ரூ.176 உயர்ந்து சென்னையில் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்து 096க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் ஏற்றமே காணப்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.71.70க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிராம் 40 பைசா உயர்ந்து கிராமுக்கு ரூ.72.10க்கு விற்கப்படுகிறது. இதேபோல, ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.71 ஆயிரத்து 700க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.400 அதிகரித்து 72 ஆயிரத்து 100க்கு விற்கப்படுகிறது.