உங்களுக்கு உழைக்க காத்திருக்கும் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்: ஸ்டாலின் இறுதி பரப்புரை
உங்களுக்காக உழைக்க காத்திருக்கும் என்னை ஏற்றிக் கொள்ளுங்கள் என இறுதிகட்ட பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

சென்னையில் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டார். கூட்டணி கட்சியினர் புடைசூழ அவர்கள் முன் வாக்கு சேகரித்த ஸ்டாலின், ‛அதிமுக அரசு ஏற்படுத்திய பின்னடைவுகளை சரி செய்தாக வேண்டும்.

அதிமுகவின் முகமுகடியில் பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பழனிச்சாமி கும்பலை முடிந்தவரை கொள்ளையடிக்க பாஜக அனுமதித்து வருகிறது. இருந்த இருவரிடமிருந்து தமிழகத்தை காக்கும் போர் நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளேன். கருணாநிதியின் மகனாக மட்டுமல்ல மக்களின் மகனாக என்னை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உங்களுக்காக உழைக்க காத்திருக்கும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்,’ என பரப்புரை செய்தார்.





















