மேலும் அறிய

Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!

தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நியமித்த அவினாஷ்குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகள் நியமனமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக  இருந்த அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டார். 

உளவுத்துறை டிஐஜியாக அஸ்ரா கார்க்

இந்த நிலையில் தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இப்படியான நிலையில் உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

அஸ்ரா கார்க் பின்னணி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மின்னணு பொறியாளர். எனினும் காவல்துறை மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக 2004ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது  காவல் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மதுரையிலும் பணியாற்றியுள்ளார். தென்மாவட்டத்தில் தலைவிரித்தாடிய கந்து வட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தினார். மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு தொடர்பான சம்பவங்களில் எந்த அழுத்தத்திற்கும் அதிரடி காட்டினார். அதன்பின்னர் தர்மபுரி, தேனி,தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றிய அவருக்கு டிஜஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  

சில ஆண்டுகாலம் மத்திய அரசு பணியில் இருந்த மீண்டும் 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்தார். அவரது கண்காணிப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு இருந்தது. கரூர் விவகாரத்தை விசாரிக்க இவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நபரானார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாககோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாககோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget