மேலும் அறிய

CM MK Stalin's Tweet: 'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்..

தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர் என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு நாள்:

தமிழர்களின் அடையாளமான இந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

சங்கரலிங்கனாரின் மறைவுக்கு பிறகு அவரது கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1962ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வந்தபோதிலும், 1964ம் ஆண்டு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா பதவியேற்ற பிறகுதான் சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கப்பட்டது. 1968ம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் வாழ்த்து: 

தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டரில் இது தொடர்பாக் பதிவு செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்! பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று! 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.  

Tamilnadu Day: 'பார் போற்றும் தமிழ்நாடு; பேர் வாங்கி தந்த புனிதன்' யார் இந்த சங்கரலிங்கனார்..? அவரது 12 கோரிக்கைகள் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget