மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மனு கொடுக்கும் சாதியாக இருக்கும் நாம் மனு வாங்கும் சாதியாக மாற வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் பேச்சு
''கர்நாடகாவில் குமாரசாமி நல்ல முறையில் அரசியல் செய்து வருகிறார்கள். நான் நமது கட்சி நிர்வாகிகளை அனுப்பி வைத்து, அவர்களின் நுணுக்கங்களை ஆராய்ந்து வர அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன்''
தருமபுரியில் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் உரையாற்றினார். கொரானா தொற்று பரவல் இருந்த காலத்திலும் கட்சியினரையும் தொண்டர்களையும் பார்க்க வந்துள்ளேன். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கடந்த அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆனால் இந்த திமுக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை மேல் முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் ஏதாவது குறை சொன்னால், அதை திருத்தி கொள்கிறார்கள். ஆகவே நமக்கு நிச்சயம் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். அவ்வாறு கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது, எல்லோருக்கும் தெரியும்.
இனி நாம் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் இந்த மாவட்டத்தில் தான் ஒரு அதிசயமான நிகழ்வு நடந்தது. ஆனால் இதே மாவட்டத்தில் தான் ஒரு கேவலமான நிகழ்வும் நடந்தது. கடந்த தேர்தலில் கூட்டணி தர்மமே இல்லாமல் போனது. பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இது வெங்காய கூட்டணி தான். இந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, மூன்று நாட்களாக பென்னாகரம் தொகுதிக்குள்ளே போக முடியவில்லை. நான் விரும்பாத சில பேரிடம் கூட பேசினேன். இந்த கூட்டணி பாமகவை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கை கோர்த்துக் கொண்டு தோற்கடிக்ககும் வேலைகளை செய்து வந்தனர்.
நமக்கு ஊடகங்கள் வைத்த பெயர் மற்றும், பாமகவின் வேறு பெயர் மற்றும். இனி தேர்தலில் வெற்றி பெற திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். அதிகாரிகள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றாலும், அவர்கள் பிரச்சனைகளை நம்மிடம் சொல்கிறார்கள். மற்ற சமுதாயங்களை ஒன்றிணைத்து திண்ணை பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்ய வேண்டும். நாம் 60 முதல் 70 தொகுதிகளை கைப்பற்றினால், ஆட்சியமைக்க முடியும். நாம் மனு கொடுக்கும் சாதியாக இருக்கிறோம். ஆனால் மனு வாங்கும் சாதியாக மாற வேண்டும்.
கர்நாடகாவில் தேவேகௌடா மற்றும் அவரது மகன் குமாரசாமி இருவரும் நல்ல முறையில் அரசியல் செய்து வருகிறார்கள். நான் நமது கட்சி நிர்வாகிகளை அனுப்பி வைத்து, அவர்களின் நுணுக்கங்களை ஆராய்ந்து வர அனுப்ப வேண்டும் என நினைக்கிறேன். நம் சமுதாயத்தில் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கும் போகாமல், தங்கமாக, வைரமாக, வைடுரியமாக இருக்கிறார்கள். எனக்கு 5000 இளைஞர்கள் மற்றும் பெண்களை கொடுங்கள் நாம் வெற்றி பெறலாம். இன்று பாரதியின் பிறந்தநாள். இனியொரு விதி செய்வோம் என்று பாரதியார் சொன்னார். இன்று நானும் சொல்கிறேன், நாம் இனியோரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம் என்று ராமதாஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion