மேலும் அறிய

Sowmya Anbumani: "கர்நாடக முதலமைச்சரின் கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது" -செளமியா அன்புமணி

காவிரியின் குறுக்கே 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும் 50 முதல் 70 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் தலைவர் செளமியா அன்புமணி, நீர் தேக்கப் பகுதிகளையும், உபரிநீர் போக்கி அமைந்துள்ள 16 கண்பாலம் பகுதியையும் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செளமியா அன்புமணி, "நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து பார்த்த போது, வறட்சியாக இருந்தது. மாதாந்திர அட்டவணைப்படி கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டிற்குத் தேவையான உரிமை நீரை வழங்காததே இதற்கு காரணம்.

மாறாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த காரணத்தினால் கர்நாடக அணைகளில் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் முழு கொள்ள்ளவை எட்டும் நேரத்தில் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலப்பதாக பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் கூட தமிழக அரசு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட சேகரித்து வைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

காவிரியின் குறுக்கே 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும் 50 முதல் 70 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் நீர் மேலாண்மையில் தமிழக அரசு எந்த ஒரு தொலை நோக்குத் திட்டங்களையும் செயல்படுத்தாத காரணத்தினால்தான் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

Sowmya Anbumani:

மேட்டூர் அணை நிரம்பினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதும், மேட்டூர் அணை வறண்டால் பயிர்கள் காய்ந்து போவதும் என்ற நிலையே இதுவரை நீடித்து வருகிறது. இதனை மாற்ற நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து கடலில் சென்று வீணாக கலக்கும் தண்ணீரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வறண்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீரும் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உபரி நீர் முறையாக பயன்படுத்தப்படாததால்தான் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகா முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget