(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: மெட்டாவெர்ஸ் உலகில் நடந்த திருமணம்... அசர வைத்த தமிழ்நாடு ஜோடி
பிப்ரவரி 6-ம் தேதி காலை, விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுர கிராமத்தில் திருமணமும், அதே நாள் மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக டிஜிட்டல் உலகில் ஒரு ஜோடி திருமணம் செய்யப்போவதாக அறிவித்தபோது சமூக வலைதளத்தில் அந்த செய்தி வைரலானது. அதாவது, இவர்களது திருமணம் மெட்டாவெர்ஸ் உலகில் நடைபெற்றுள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரானின் பரவலால் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், புதுவிதமாக திருமண நிகழ்வுகளை நடத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் மெட்டாவெர்ஸ் வெட்டிங்.
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் என்பவரும், ஜெனநந்தினி என்பவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்துள்ளனர். தினேஷ் ஐ.டியிலும், ஜெகநந்தினி சாஃப்ட்வேர் உருவாக்கத்திலும் பணிபுரிபவர்கள். இவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி மெட்டாவெர்ஸில் நடைபெற்றுள்ளது. திருமண ஜோடியும், திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் விருந்தினர்களும் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்து கொண்டுள்ளனர். இதனால், கொரோனா பரவல் போன்ற சூழலில் பாதுகாப்பான முறையில் ஒரு பெரிய நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
வீடியோவைக் காண:
At @kshatriyan2811 's meta wedding 👰💍🤵💒 @TardiVerse #asiasfirst #Metaverse #metawedding pic.twitter.com/RRGyEzUz4Y
— cryptopangu.nft (@CryptoPangu) February 6, 2022
Finally into Asia's 1st Metaverse Wedding. Interesting experience. @beyondlifeclub @TardiVerse @kshatriyan2811 pic.twitter.com/zhGPTuedOf
— Divit (@divitonchain) February 6, 2022
திருமண வாழ்த்து தெரிவிப்பவர்கள், கூகுள் பே அல்லது வேறு செயலிகள் மூலம் அன்பளிப்பை வழங்கலாம் என அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது ஏற்கனவே வைரலானது. அதனை அடுத்து, பிப்ரவரி 6-ம் தேதி காலை, விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுர கிராமத்தில் திருமணமும், அதே நாள் மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த இந்த புதுவித திருமணம், ஹாரி-பாட்டர் மெட்டாவெர்ஸ் தீமில் நடந்து முடிந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்