மேலும் அறிய
Advertisement
Watch Audio: ''சசிகலாவை அதிமுகவிற்கு கொண்டுவர வேலை நடக்கிறது''- சர்ச்சை ஆடியோவுக்கு செல்லூர் ராஜூ மறுப்பு
''தமிழ்நாட்டில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் வளர்ச்சி பிடிக்காத சமூக விரோதிகளால் பரப்பப்படுகிறது''
அதிமுகவில் சசிகலாவை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசும் நபர் ஒருவர், தன்பெயர் சக்திவேல் எனவும் தான் குவைத்தில் இருந்து பேசுவதாகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார். நம் கட்சிக்கான அடையாளம் அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா என்றுதானே கொண்டு வந்து இருக்கிறோம் என கேள்வி எழுப்பும் நிலையில், அதற்கு இருக்குயா அப்புடியாதாயா இருக்கு என செல்லூர் ராஜூ பதிலளிக்கிறார். மேலும் நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம், அது முறையாக செல்லவேண்டும் எனக்கூறும் அவர், இல்லையென்றால் மொத்தமாக போய்விடும் என்றும், இல்லையெற்றால் அவர்கள் கைப்பற்றிவிட்டு போய்விடுவார்கள்,
கொஞ்சம் கொஞ்சமாக அடித்து காலி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார். சசிகலாவை அதிமுகவிற்கு கொண்டுவரும் வேலைகள் நடந்து வருவதாக செல்லூர் ராஜூ பேச்சின் சாராம்சம் அமைந்துள்ளது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த ஆடியோவில் பேசுவது என் குரல் அல்ல என செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடைய அல்ல. எனக்கும் அந்த ஆடியோக்கும் எந்த தொடர்பும் இல்லை. அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
எங்களுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமையில் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழ்நாட்டில் நகர்ப்புற தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.கவின் வளர்ச்சி பிடிக்காத சமூக விரோதிகளால் பரப்பப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா விவரகத்தில் உங்களையே குறிவைத்து தாக்குதல் நடத்த என்ன காரணம் என்ற கேள்விக்கு: ஊடக மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதால் இது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி விடலாம் என சமூக விரோதிகள் முயற்சி செய்யலாம். என்னை வைத்து கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சசிகலா வருகையின் குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்”என்றார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று இருந்தால் நான் தான் அடுத்த எம்ஜிஆர் என எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பார் என முன்னாள் எம்.பி அன்வராஜா ஒருமையில் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இப்பிரச்னை பெரியதாக பேசப்பட்ட நிலையில் அன்வராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த சசிகலா குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் குறித்தும் செல்லூர் ராஜூ பேசுவது போல வெளியான ஆடியோவும் தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது
நிலையில், இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion