சோகத்தில் மூழ்கிய விருதாச்சலம்; ஓடும் ரயிலில் தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணியின் உடல் ஒப்படைப்பு
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் மேல் நிலைய நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, தனது குடும்பத்தினர் 11 பேருடன் சென்னையில் இருந்து நேற்று மாலை அதாவது மே 2ஆம் தேதி மாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்று கொண்டிருந்தனர்.
இந்த ரெயில் நேற்று இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரிக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் படியில் நின்று வாமிட் எடுத்தபொழுது திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயிவ்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் ஆகி எட்டு மாதங்களை ஆன நிலையில் சந்தேக மரணம் என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் தரப்பில் இருந்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் கோட்டாட்சியர் சையத் மெஹமுத் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் கஸ்தூரியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏழுமாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது விருதாச்சலம் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.