கொக்கு பிடிப்பதற்காக பழங்களில் மருந்து.. வாழைப்பழத்தை சாப்பிட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை.. நடந்தது என்ன?
விழுப்புரம்: கொக்கு பிடிப்பதற்காக வாழைப்பழத்தில் மருந்து கலந்து வைத்த, பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே கொக்கு பிடிப்பதற்காக வாழைப்பழத்தில் மருந்து கலந்து வைத்த, பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொக்கு பிடிப்பதற்காக வாழைப்பழத்தில் மருந்து கலந்து வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டிவனம் அடுத்த செஞ்சி அருகே உள்ள கல்லேரி கிராமத்தை சேர்ந்த குமார் மகன் விஜி என்கின்ற விக்னேஷ் (7), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன்கள் செல்வமூர்த்தி (7), பாலாஜி (12), இருளர் குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களும், அதே பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
30 டன் ரேஷன் அரிசி மக்கி புழு பூத்து துர்நாற்றம் - கேள்வி எழுப்பும் திமுக எம்எம்ஏக்கள்..!
பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தொண்டி ஆற்றின் பாலத்தின் கீழே குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு கிடந்த 3 வாழைப்பழத்தை எடுத்து ஆளுக்கு ஒன்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிடும்போது வாழைப்பழத்தின் உள்ளே (பியூரிடான்) மருந்து இருப்பதை அறிந்த பாலாஜி அப்பகுதியில் வயலில் வேலை செய்பவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் புகைப்படம்
அவர்களை மீட்ட பெற்றோர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மூன்று சிறுவர்களையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செஞ்சி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க....
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்