மேலும் அறிய

ரயில் பயணிகள் கவனத்திற்கு: விழுப்புரம் வழித்தட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்களின் போக்குவரத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம் : விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு முக்கிய ரயில்களின் போக்குவரத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

திருச்சி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், வழித்தட மாற்றம் மற்றும் காலதாமதமாக இயக்கம் என ஐந்து பிரிவுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:

பகுதியளவில் ரத்து செய்யப்படும் ரயில்கள்

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண்: 66045): ஜூலை 8, 12, 13, 14, 15, 17, 18, 25, 29 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்.

காக்கிநாடா துறைமுக சந்திப்பு - புதுச்சேரி சிர்கார் விரைவு ரயில் (வ.எண்: 17655): ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு - புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.

திண்டுக்கல் - விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண்: 16868): ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் விருத்தாசலம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண்: 16111): ஜூலை 8, 25, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - புதுச்சேரி இடையேயும், ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - புதுச்சேரி இடையேயும் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

கச்சிகுடா - புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண்: 17653): ஜூலை 12-ஆம் தேதி செங்கல்பட்டு - புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

புதுதில்லி - புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண்: 22404): ஜூலை 12-ஆம் தேதி விழுப்புரம் - புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

புறப்படும் இடம் மாற்றப்பட்ட ரயில்கள் (பகுதியளவு ரத்தால்)

பகுதியளவு ரத்து காரணமாக, சில ரயில்கள் வழக்கமான நிலையங்களுக்குப் பதிலாக வேறு ரயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்படும்:

விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வ.எண்: 66046): விழுப்புரத்திற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்படும்.

புதுச்சேரி - கச்சிகுடா விரைவு ரயில் (வ.எண்: 17654): புதுச்சேரிக்குப் பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும்.

புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (வ.எண்: 16861): புதுச்சேரிக்குப் பதிலாக கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.54 மணிக்கு புறப்படும்.

விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில் (வ.எண்: 16867): விழுப்புரத்திற்குப் பதிலாக விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.31 மணிக்கு புறப்படும்.

விழுப்புரம் - மயிலாடுதுறை விரைவு ரயில் (வ.எண்: 66019): விழுப்புரத்திற்குப் பதிலாக திருத்துறையூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.56 மணிக்கு புறப்படும்.

புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் சிர்கார் விரைவு ரயில் (வ.எண்: 17656): புதுச்சேரிக்குப் பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும்.

புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் (வ.எண்: 12868): வழக்கமான வழித்தட மாற்றத்தால், இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.

வழித்தட மாற்றம்

லோக்மான்ய திலக் - காரைக்கால் வாராந்திர விரைவு ரயில் (வ.எண்: 11107): லோக்மான்ய திலக் முனையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஜூலை 11-ஆம் தேதி விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் துறைமுகம் வழியாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். இந்த மாற்றத்தால், ரயில் விருத்தாசலம் மற்றும் கடலூர் துறைமுக ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வழியில் நிறுத்தி வைத்து இயக்கப்படும் ரயில்கள்

குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வ.எண்: 16128): ஜூலை 14-ஆம் தேதி வழியில் ஒரு வசதியான ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (வ.எண்: 22676): ஜூலை 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் வழியில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்: 16127): ஜூலை 8, 25, 29 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

காலதாமதமாக இயக்கப்படும் ரயில்

புதுச்சேரி - திருப்பதி விரைவு ரயில் (வ.எண்: 16112): ஜூலை 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக, பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். மேலும், இந்த ரயில் வழியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னரே தொடர்ந்து இயக்கப்படும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

10 நாட்டு படங்கள்... கட்டணம் 'இலவசம்'! – புதுச்சேரியில் களைகட்டும் சர்வதேச திரைப்பட விழா!
10 நாட்டு படங்கள்... கட்டணம் 'இலவசம்'! – புதுச்சேரியில் களைகட்டும் சர்வதேச திரைப்பட விழா!
டெல்லிக்கு ஷாக் கொடுக்கப் போகும் தமிழ்நாடு? முதல்வர் விஜய் தலைமையில் கூடும் அவசர ஆலோசனைக் கூட்டம்!
டெல்லிக்கு ஷாக் கொடுக்கப் போகும் தமிழ்நாடு? முதல்வர் விஜய் தலைமையில் கூடும் அவசர கூட்டம்!
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget