Vikravandi By-Election LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு
Vikravandi By-Election Polling LIVE Updates: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான கள நிலவரங்களை உடனுக்குடன் கீழே அறியலாம்.

Background
விக்கிரவாண்டியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் தொடங்கியது.
இந்த தேர்தலில் முக்கியமான வேட்பாளர்களாக தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அந்த தொகுதியில் மொத்தம் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்பதிவுக்கு 2 மின்னனு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 552 வாக்கு இயந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், 276 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Vikravandi By-Election LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு
Vikravandi By-Election LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Vikravandi By-Election LIVE: 5 மணி நிலவரம்! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவு
Vikravandi By-Election LIVE: 5 மணி நிலவரம்! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.





















