மேலும் அறிய

TVK Manadu: தவெக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? - போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதில் அளித்த புஸ்சி ஆனந்த்

காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர்.

விழுப்புரம்: விஜய் மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டி எஸ் பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர்.

காவல்துறை கேள்விக்கு பதில் 

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 23 ஆம் தேதி நடத்துவதற்கு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரி கடந்த 28 ஆம் தேதி மனு அளித்தனர். தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மனுவில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து குறிப்பிடவில்லை என்பதால் மாநாடு நடத்துவதற்கு நடைமுறை விளக்கங்களாக 21 கேள்விகள் எழுப்பப்பட்டு கடந்த 2 ஆம் தேதி பதிலளிக்க அக்கட்சியின் பொதுசெயலாளர் என் ஆனந்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. அவகாசம் கொடுக்கப்பட்டு இன்று 5 நாட்கள் முடிவடைவதால் 21 கேள்விகளுக்கு விளக்கமளித்து அக்கட்சியின் நிர்வாகிகள் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பதில் அளித்துள்ளனர். காவல் துறையினர் பதில்களை ஆராய்ந்து மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பது தெரியவரும்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு 

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி கடிதம்

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற கடிதம் அளித்தனர்.

21 கேள்விகளுக்கு பதில் கேட்டு நோட்டீஸ் 

1. தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?

2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம்?

3. தாங்கள் 23.09.2024 அன்று மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் பெறப்பட்டுள்ளதா? யார்? அவர்களிடம் முறையாக அனுமதி

4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் பெயர் பட்டியல்.

5. மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்.

6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.

7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை? மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.

8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.

9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.

10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்)

11. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்?

13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம்.

14. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர.,)

15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா

16.மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்.

17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்.

18. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிதடங்கள் எத்தனை?

19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழிதடம் பற்றிய விபரம்.

20. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிதடங்கள் எத்தனை?

21. மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget