கரூரில் விஜய் பயிலரங்கம் திறப்பு விழா; முதல் நாளிலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்
அனைத்து அடிப்படை வசதிகளுடன் இரவு நேர பாடசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கரூர் ஆத்தூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விஜய் பயிலரங்கம் திறப்பு விழாவில் முதல் நாளிலே 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 'தளபதி விஜய் பயிலகம்' தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர பாடசாலை திறக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் இரண்டாவது இடமாக பயிலரங்கமாக ஆத்தூர் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் இரவு நேர பாடசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முதல் நாள் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பால், பிரட் உள்ளிட்டவைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.