மேலும் அறிய
Vijay Makkal Iyakkam Trending: வெற்றி! வெற்றி! ட்விட்டரில் ஒன்றுகூடிய விஜய் ரசிகர்கள்! இனி அரசியல் ட்ரெண்டிங்தானாம்!
விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் கோலகலமாக கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம்
கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் 4 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பர்வேஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் கோலகலமாக கொண்டாடத் தொடங்கியுள்ளனர். ட்விட்டரில் #VijayMakkalIyakkam என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















