மேலும் அறிய

BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு

கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் இருந்து புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்து BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நுழைவு வரி செலுத்த தாமதம் ஆனதால், 400% அளவுக்கு வணிகவரி துறை அபாராதம் விதித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் அபாராதம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  நீதிபதி சி.சரவணன் இம்மனு விசாரனையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், மனுவை விசாரிக்கும் வரை, BMW காருக்கு விதிக்கப்பட்ட அபராதம் செலுத்த வேண்டாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயிடம் இருக்கும் கார் கலெக்‌ஷன்களை பொருத்தவரை, நிசான் எக்ஸ்-டிரெயில் இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் இல்லை, அனால் விஜயிடம் ஒன்று உள்ளது. தனது டொயோட்டா காரை விஜய் தனது தினசரி தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார். இயக்குநர் ஷங்கருக்குப் பிறகு, ஆர் பேட்ஜுடன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டை சொந்தமாகக் கொண்ட இரண்டாவது தமிழ் பிரபலம் நடிகர் விஜய்தான். பி.எம்.டபிள்யூ ரேஞ்ச் கார்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும் இவரிடம் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6-ஐ வகை கார்கள் இவரிடம் உள்ளது. 

மேலும் படிக்க: Vijay Rolls Royce Issue: முடிவுக்கு வந்தது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget