Sterlite Sale : விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை...! வேதாந்தா நிறுவனம் கொடுத்த திடீர் விளம்பர அறிவிப்பு..
Sterlite : தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விற்பனை செய்யப்படுவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்று வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் 22 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், வேதாந்தா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்த நிலையில், வேதாந்த நிறுவனம் தங்களது முக்கிய யூனிட்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள காப்பர் உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் தன்னுடை ஸ்மெல்டர் காம்ப்ளெக்ஸ் ( முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயண்ட் ட்ரீட்மெண்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் ப்ளான்ட், ஆர்.ஓ. யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேஷன் யூனிட் மற்றும் வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
விருப்பமுள்ள நபர்கள் வரும் ஜூலை 4-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு வேதாந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் காப்பர் உற்பத்தியில் முக்கியப்பங்கு வகித்தாலும் அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளும், புகையாலும் பெரும்பாலான மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மீது சுற்றுவட்டார மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்தது. தொடர்ந்து தீவிரமாக போராடிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் 22 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர், மக்களின் எதிர்ப்பு, ஆலை மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்பட்டது. இதன்காரணமாகவே தற்போது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : TN 10th 12th Result 2022: ‛க்ளிக் செய்தால் உடனே ரிசல்ட்...’ 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடும் ABP நாடு!
மேலும் படிக்க : TN 10th 12th Result : முதல்முறையாக ஒரேநாளில் 10,12-ஆம் வகுப்பு ரிசல்ட்ஸ்.. நேரம், இணையதளம் என எல்லா தகவல்களும்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்