TN 10th 12th Result : முதல்முறையாக ஒரேநாளில் 10,12-ஆம் வகுப்பு ரிசல்ட்ஸ்.. நேரம், இணையதளம் என எல்லா தகவல்களும்..
Tamil Nadu 10th 12th Result : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நான்கு இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெற்ற 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியாகிறது. காலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், நண்பகல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை நான்கு இணையதளங்களை வெளியிட்டுள்ளது.
அவை
http://dge2.tn.gov.in
http:dge.tn.gov.in
ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் முதலில் இந்த இணையதளங்களுக்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், தேர்வு முடிவுகளை எளிதாக காணலாம். பள்ளிகள், இணையதளங்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் ஆகியவை மட்டுமின்றி நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலம், அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை காண்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையளதளங்களில் குவிவார்கள் என்பதால் இந்த முறை நான்கு இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : TN 10th 12th Result 2022 LIVE: இன்று வெளியாகிறது 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! தெரிந்துகொள்வது எப்படி..?
மேலும் படிக்க : TN 10th 12th Result 2022: ‛க்ளிக் செய்தால் உடனே ரிசல்ட்...’ 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடும் ABP நாடு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்