மேலும் அறிய

Thirumavalavan: திருமாவளவனை முதல்வராக்க வேண்டும்.. விசிக சிந்தனை செல்வன் வலியுறுத்தல்!

சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற திருமாவளவனை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும் என சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். 

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பினால் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதனிடையே 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இல்லாமல் தவிக்கிறது. இதனால் அக்கட்சி தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனின் ஆதரவை கேட்டுள்ளார். அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவை இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்க உள்ளது. 

இப்படியான நிலையில், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கி உள்ளன.  திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் இது என்கிறார்கள் சிலர். விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை இது. அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல. பொங்கி வழிந்து உடனே வடிந்து நீர்த்துவிடும் மாய சுனாமி இது என்கிறார்கள் சிலர். 

இது மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே நடந்த தேர்தல் அல்ல. மனிதனுக்கும் வாக்குச்சாவடி எந்திரத்திற்கும் இடையே நடந்த யுத்தம் இது. நேர்மையான தேர்தலை நடத்தவா ஞானேஷ்குமாரை பாஜக குறுக்கு வழியில் சட்டங்களை வளைத்து தலைமைத்தேர்தல் அதிகாரியாக கொண்டு வந்தது. பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்கருத்தை பொதுக்கருத்தாக திணித்து அதற்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அரங்கேற்றப்படும் நுட்பமான மோசடி இது என உறுதிபட சொல்பவர்களின் கருத்தும் புறக்கணிக்க முடியாததுதான்.

குளத்தூரில் அண்ணன் ஸ்டாலினின் தோல்வி எந்திர மோசடியே தவிர அது வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மை நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன. இத்தகு சூழலில்தான் குடித்து விட்டு தெருவில் ஆடும் சில தவெக எம் எல் ஏக்களின் ஆட்டம் , திரு. விஜயின் உடனிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை கண்டு அதிர்ந்து போன பலரும் அதிமுகவை குறைந்தபட்ச செயல் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க முன்வரவேண்டுமென பேசுவதையும் காண முடிகிறது.

 

என்னிடமும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இது குறித்து பேசினார்கள். ரசிக மனோநிலை உருவாக்கிய ஆபத்திலிருந்து நாட்டை காக்க இப்படி நடந்தால் என்ன என கேள்வி எழுப்பினார்கள். இந்த சூழலில் தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது. 

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த திருமாவளவனை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும். சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம். 

இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெரிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.  

அதோடு மட்டுமல்லாமல் பின்குறிப்பு என குறிப்பிட்டு, “சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அன்பர்கள் கவனத்திற்கு. இது என் தனிப்பட்ட கருத்தல்ல. கோடிக்கணக்கான மக்களை நம்பிக்கையூட்டும் கருத்து. ஆனால் சத்தியமாக திருமாவளவனுடன் இது குறித்து நான் கலந்து பேசவில்லை. முதல் முறையாக கட்சித்தோழர்கள் யாருடனும் கலந்து பேசாமல் மக்களின் தாகத்தை நான் பதிவுசெய்துள்ளேன்” எனவும் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
இன்றைய வானிலை அறிக்கை: இந்த மாவட்ட மக்களே உஷார்... இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு!
இன்றைய வானிலை அறிக்கை: இந்த மாவட்ட மக்களே உஷார்... இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு!
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget