மேலும் அறிய

Vanniyars Reservation: எம்பிசி & சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர்கள் - ஆர்டிஐ சொல்வது என்ன?

Vanniyars Reservation: வன்னியர்கள் 10.5சதவிகிதத்தை காட்டிலும் அதிக இடஒதுக்கீட்டு பலன்களை அனுபவிப்பதாக, தகவல் அறியும் உரிமைச்ச சட்டம் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.

Vanniyars Reservation: மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீரமரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர்களே ஆதிக்கம் செலுத்துவதாக ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் - ஆர்டிஐ தகவல்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடுகளால்,  வன்னியர்கள் தான் அதிகம் பயன் பெறுவதாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.  தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள சில குறிப்பிட்ட பிரிவினர் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி,  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எனும் ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்காக 20 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், வன்னியர்கள் எப்படி பலன் அடைந்துளனர் என்பது தொடர்பான ஆர்டிஐ தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

”20% இடஒதுக்கீட்டில் அதிக பலன் பெறும் வன்னியர்கள்”

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-4 தேர்வுகளில் 2012-2022 வரை 26,784 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். அதாவது வன்னியர்க மட்டும் 19.5 சதவிகிதமாகும்.
  • அதே காலகட்டத்தில் குரூப்-2 தேர்வுகளில் மொத்தம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 2,682 பேர். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரில் மொத்தம் தேர்ச்சி பெற்றோர் 366 பேர். இவர்களில் 20 சதவீதத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியர்கள் மட்டும் 270 பேர். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் நியமன வாரியத்தின் கீழ் 2013-2022ம் ஆண்டுகளில், 1,919 பேர் காவல் உதவி ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 605 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 327 பேர். அதாவது 17 சதவிகிதத்தினர்.
  • 2013 மற்றும் 2022க்கு இடையில் தமிழ்நாடு மருத்துவ சேவை நியமன வாரியத்தினால் பணியமர்த்தப்பட்ட 8,379 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 1,433 பேர் நியமனம் பெற்றனர். இவர்களில் வன்னியர்கள் 1,185 பேர்.இது மொத்த நியமனங்களில் 17.1 சதவிகிதமாகும்.
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 3,044 முதுநிலை ஆசிரியர்களில் 17.5 விழுக்காடு ஆசிரியர்கள், அதாவது 383 பேர் வன்னியர்கள். 
  • 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 24,330 மாணவர்களில்,  மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் 4,873 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் வன்னியர் சமுயதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 2,781 மாணவர்கள். இது 11.4 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.8 சதவிகிதம் அதாவது 3,354 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.
  • மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 6,966. இதில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1,363 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வன்னிய சமுதாய மாணவர்கள் மட்டும் 940 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இது 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.5 சதவிகித வன்னிய மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்தம் 6,234 இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினருக்கான இடங்கள் 933. இதில் வன்னியர்கள் 437 பேர். இது 10.7 சதவிகிதமாகும்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 751. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த 137 பேர் பல் மருத்துவ கல்லூரி பட்ட மேற்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது மொத்த இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 11.2 சதவிகிதமாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் வாயிலாக, பாமக தற்போது கோரி வரும் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை காட்டிலுமே, அதிக அளவில் இடஒதுக்கீட்டால் வன்னியர்கள் பயனடைந்து வருவதை காட்டுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget