![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vanniyar Reservation: வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீடு - மனுவில் இருப்பது என்ன?
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
![Vanniyar Reservation: வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீடு - மனுவில் இருப்பது என்ன? Vanniyar 10.5 percent reservation Tamil Nadu Govt appeals supreme court check full details here Vanniyar Reservation: வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீடு - மனுவில் இருப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/16/cb9fc22986630922d1048997da56565c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டம் இயற்றியது. அப்போதைய அரசு இயற்றிய அந்த சட்டத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தனர்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளை, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
மேல் முறையீட்டு மனுவில் இருப்பது என்ன ?
- வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் அரசு நிர்வாகம் சிக்கலை சந்தித்து இருக்கிறது.
- உள் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டுமானது அல்ல. அது மற்ற 7 பிரிவினருக்கும் தரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தவறானது.
- உள் இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது
- உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்
- இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை வேண்டும்
- நடைமுறையில் உள்ள 69 % இட ஒதுக்கீட்டை மீறாமலேயே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
- மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில்தான் உள் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது
- ஏற்கனவே இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது
- கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில்தான், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : Coimbatore Student Suicide | எந்த வக்கீலும் ஆஜராகக்கூடாது.. கோவை மாணவிக்காக கொந்தளித்த எம்.எஸ். பாஸ்கர்
மேலும் படிக்க : Chennai Rains | இது சீன் 2 .. அடுத்த இரண்டு நாட்கள் கனமழை குறித்து வெதர்மேனின் அதிரடி அப்டேட்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)