Coimbatore Student Suicide | எந்த வக்கீலும் ஆஜராகக்கூடாது.. கோவை மாணவிக்காக கொந்தளித்த எம்.எஸ். பாஸ்கர்
கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு குணச்சித்திர நடிகர் எம். எஸ். பாஸ்கர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு காரணமாக குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
Chennai Rains | இது சீன் 2 .. அடுத்த இரண்டு நாட்கள் கனமழை குறித்து வெதர்மேனின் அதிரடி அப்டேட்#WeathermanUpdate #ChennaiRainshttps://t.co/A1uG02dWsI
— ABP Nadu (@abpnadu) November 16, 2021
வன்னியர் சமூகத்துக்கான 10.5 % இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..#VanniyarReservation #SupremeCourthttps://t.co/PrT9fKwZkQ
— ABP Nadu (@abpnadu) November 16, 2021
Nallamma Naidu Passed Away : நேர்மைமிகு அதிகாரி எனும் புகழ்.. லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு காலமானார்..#NallamaNaiduhttps://t.co/cutaNQpB5d
— ABP Nadu (@abpnadu) November 16, 2021