மேலும் அறிய

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் “வந்தே பாரத்” ரயில் பல நாடுகளில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் என விமானங்களுக்கு இணையான நவீன சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வந்தே பாரத் ரயில்:

இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரயில்  சேவைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்துக்குள் முதலாவது வந்தே பாரத் ரயில் , சென்னை - கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்  சேவை தொடங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில்  சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

சென்னை - நெல்லை:

சென்னை- நெல்லை இடையே இதை ஏற்று சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரெயிலில் முதல்கட்டமாக 552 பயணிகள் பயணம் செய்யும் வகையில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில்  சேவை தொடங்கப்பட உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது என்பதால் 8 பெட்டிகளிலும் இருக்கைகள், உட்கார்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்  சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில்  நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும், விழுப்புரம் ரயில்  நிலையத்தில் நின்று செல்லாது என தகவல் வெளியானது. இது விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் மற்றும் இங்கு வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களிலும் மற்றும் உறவினர் வீட்டு, சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரும்பாலும் விழுப்புரத்தில் இருந்து ரயில்  பயணமாகவே சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரயில்  நிலையம் திகழ்ந்து வருவதாலும், இந்த ரயில்  நிலையம் “ஏ தரச்சான்று” பெற்ற ரயில்  நிலையமாகவும், ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் ரயில்  நிலையங்களில் ஒன்றாகவும் இருந்து வருவதால் விழுப்புரம் ரயில்  நிலையத்தில் வந்தே பாரத் ரயில்  நின்று செல்ல நிறுத்தப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசுக்கும், ரயில்வே துறைக்கும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

விழுப்புரத்தில் நிற்கும்

விழுப்புரத்தில் நின்று செல்லும் இந்நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்  சேவை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கப்படும் என்றும், இந்த ரயில்  விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்றுசெல்லும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக விழுப்புரத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தடைகிறது.

Vande Bharat: “வந்தே பாரத்” ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் - ரயில்வே அறிவிப்பு

பின்னர் 12.02 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில்  மதியம் 1.50 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில்  விழுப்புரம் ரயில்  நிலையத்தை மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.37 மணிக்கு புறப்படும் ரயில்  இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. மேலும் மணிக்கு 83.30 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலானது, சென்னை- திருநெல்வேலி இடையேயான 652.49 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் இன்று இரண்டாம் கட்டமாக  நெல்லையில் இருந்து சென்னைக்கு  சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
Embed widget