மேலும் அறிய

திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடனும், ரவுடிகள் தைரியமாகவும் உள்ளனர்.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

”திமுக அரசின் ரவுடிகளையும், சமூக விரோதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால்தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன”

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதன் விளைவாக கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என சட்ட விரோதச் செயல்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதனால், சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சேவாக் என்ற 21 வயதான இளைஞர், கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொன்று வீட்டிலேயே புதைத்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரம் இது.

கடந்த ஆகஸ்டில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா போதையில் வந்த 5 பேர் கும்பல், 50 வயதான கோபாலகிருஷ்ணன் என்பவரை அடித்து கொன்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், தாழவேடு பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் வந்த 3போ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. இது ஒருசில உதாரணங்கள் மட்டுமே. இப்படி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் திமுக அரசு, ரவுடிகளிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதியையும், திமுக அரசையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்யும் திமுக அரசின் ரவுடிகளையும், சமூக விரோதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால்தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. மக்கள் பயமின்றியும், ரவுடிகள், சமூக விரோதிகள் அச்சத்துடனும் இருந்தால்தான் அங்கு நல்லாட்சி நடப்பதாக அர்த்தம். ஆனால், திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். வுடிகள் தைரியமாக வலம் வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget