மேலும் அறிய

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதினருக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிவழங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், அதனைக்  கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்கள். அதில்  சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களை பணிசெய்ய அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால், கிராமப்புற ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றார்கள். பெரும்பாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலைவாய்ப்பை நம்பியே உள்ளதாக மதிமுக பொதுச்செயளாலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற முடியாது என்ற அறிவிப்பால், கணவன் மற்றும் குழந்தைகளை இழந்து வாழும் பெண்களும், வயதானவர்களும் வேலையில்லாமல் உணவுக்குக் கூட  வழியின்றி தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள வைகோ, கொரோனாவால் ஏற்படும் மரணங்களை விட, உணவுக்கு வழியின்றி பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் பெரும்பாலான கிராம மக்களின் வீட்டில் அடுப்பு எரிகின்றது. 

தற்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. ஆகவே, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும்  அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இரண்டு சிறுவர்களை கடித்து குதறிய நாய்கள்! அடுத்தடுத்த சம்பவங்களால் அச்சரப்பாக்கத்தில் அச்சம்!
இரண்டு சிறுவர்களை கடித்து குதறிய நாய்கள்! அடுத்தடுத்த சம்பவங்களால் அச்சரப்பாக்கத்தில் அச்சம்!
Embed widget