![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN 12th Result 2023: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது? முழு விவரம் இதோ..
Tamil Nadu 12th Result 2023: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![TN 12th Result 2023: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது? முழு விவரம் இதோ.. URL Tamil Nadu 12th Result 2023 Declared at Official Website www.tnresults.nic.in TN 12th Result 2023 Announced TN 12th Result 2023: வெளியானது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது? முழு விவரம் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/7bc90fcca0d7dc8b02915c3483dfd9ec1683523140087589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tamil Nadu 12th Result 2023: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி(இன்று) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர்.
ஏப்ரல் 11ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை ஆசிரியர்கள் தொடங்கினர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், விடைத் தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டன.
விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று ( மே 7) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது.
தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?
அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வழிகள்:
மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)