Plastic Pollution : நெகிழி மாசுபாடு ஒழிப்பு தீர்மானம் - மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள்..!
இது நெகிழியின் உற்பத்தி முதல் (பெட்ரோலிய அகழ்வு முதல்) கழிவுநீக்கம் வரையிலான முழுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது தொடர்பாக அனைத்து நாடுகளையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை 2024ம் ஆண்டிற்குள் உருவாக்குவது என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையின் ஐந்தாவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) March 2, 2022
நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது தொடர்பாக அனைத்து நாடுகளையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை 2024ம் ஆண்டிற்குள் உருவாக்குவது என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையின் ஐந்தாவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.https://t.co/vlCjd7LbnC pic.twitter.com/zPtkK91Rgm
இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் டுவிட்டர் பக்கத்தில், ‘உலக வரலாற்றில் முதல்முறையாக நெகிழியைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக 175 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட மாநாடு ஐநாவின் தலைமையின்கீழ் நைரோபியில் இம்மாதம் தொடங்கி நடைபெற்றுவந்தது. இது நெகிழியின் உற்பத்தி முதல் (பெட்ரோலிய அகழ்வு முதல்) கழிவுநீக்கம் வரையிலான முழுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூட்டத்தின் ஐந்தாவது அமர்வில் (UNEA 5.2) நெகிழியை 2024 ஆம் ஆண்டுக்குள் நெகிழியைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமாக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்க உறுதியளித்து உலக நாடுகள் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றன. இது நெகிழியை ஒழிப்பதில் மனிதருக்கும் பூமிக்கும் கிடைத்த வெற்றி என்று ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பான UNEP தெரிவித்திருக்கிறது’ எனப் பதிவிடப்பட்டுள்ளது.
“Today was one for the history books. It was truly a big day for the environment.” - @andersen_inger
— UN Environment Programme (@UNEP) March 2, 2022
Nations committed to develop a legally binding agreement to #BeatPlasticPollution at #UNEA5.
Learn more: https://t.co/HEdWaZeCRh pic.twitter.com/ohtACjQoR3
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்