தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., -ஐ தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு பொறுப்புகளுக்கான ஆட்சிப்பணி அதிகாரிகளைத் தொடர்ச்சியாக பணியிடமாற்றம் செய்துவருகிறது. 24 மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சியாளர்களை அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியாளர்கள் அரசு நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பணியிடமாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., -ஐ தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துத் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணைய ஒழுங்குமுறைகளின் கீழ் ஒழுங்குமுறை 8(1)ன் படி மேதகு ஆளுநர் ஒப்புதலுடன் இதுநாள்வரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்துவரும் உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., இனி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக நியமிக்கப்படுகிறார். அவரது துணைச் செயலராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., பொறுப்பில் இருப்பார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியிட்ட அறிவிக்கையின்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஐ.ஏ.எஸ்., தற்போது கிராமப்புற மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுபாட்டாளராக சுதன் ஐ.ஏ.எஸ்., சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் அண்ணாதுரை ஐ.ஏ.எஸ்., விவசாயத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்., நிலநிர்வாக ஆணையாளராக மாற்றம். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறைக் கூடுதல் ஆணையர் லட்சுமிப்பிரியா ஐ.ஏ.எஸ். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கணக்கெடுப்பு மற்றும் குடியேற்றங்களின் ஆணையர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ்., நகர பஞ்சாயத்துத்துறை ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயனும், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரனும் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கராவும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர்களாக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக இயக்குநராக வந்தனா கார்க்கும், சேலம் SAGOSERVE நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பத்மஜாவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநராக சரவணனும், நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநராக இளம்பகவத்தும் சென்னை மாநகராட்சியின் தென் மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜித் சிங் கஹ்லானும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சார் ஆட்சியராக உள்ளவர்களுக்கு கூடுதல் ஆட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சார் ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு
தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பன்னாவர் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சீத் சிங் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் சரவணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கூடுதல் இயக்குநராக நியமனம்
கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
தருமபுரி சார் ஆட்சியர் பிரதாப் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
சிவகாசி சார் ஆட்சியர் சி.தினேஷ் குமார் திண்டுக்கல் கூடுதல் ஆட்சியராக நியமனம்
மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக நியமனம்
திண்டிவனம் சார் ஆட்சியர் அனு அரசு பொதுத்துறை துணை செயலாளராக நியமனம்
குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் சேலம் கூடுதல் ஆட்சியராக நியமனம்
சேரன்மாதேவி சார் ஆட்சியர் ப்ரதிக் தயால் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராக நியமனம்
ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுக்ஹபுத்ரா தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
Also Read: அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு