மேலும் அறிய

Udhayanidhi Stalin: அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்.. தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களின் கருத்து என்ன?

ஆதவன் படத்தின் சின்ன கேரக்டரில் அறிமுகமான அவர், 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். 

நடிகரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அரசின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

திரையுலகின் முக்கிய புள்ளி 

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை நடிகராகவே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் அறிந்திருந்தனர். விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். ஆதவன் படத்தின் சின்ன கேரக்டரில் அறிமுகமான அவர், 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். 

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர், பிற படங்களை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், வெளியிடும் உரிமையை பெறுவது என தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியாக உதயநிதி ஸ்டாலின் திகழ்ந்தார். இதற்கிடையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக அரசியல் மேடையில் களம் கண்ட அவர், எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்தார். அவரின் நகைச்சுவை கலந்த பேச்சு மக்களை பெரிதும் கவர்ந்தது. 

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரசியல் களம் 

இதனையறிந்த திமுக தலைமை 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி உதயநிதியை இளைஞரணி செயலாளராக நியமித்தது. தொடர்ந்து இளைஞர் அணியினரை கொண்டு பல நலத்திட்டங்கள் ஆட்சியில் இல்லாதபோதும் செய்தார். குடியுரிமை திருத்த சட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தில் அரசியலில் கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார். 

வாரிசு அரசியல் என முத்திரை குத்தப்பட்டாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் 2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற திமுக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அந்த தேர்தல் பரப்புரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கிண்டல் செய்யும் விதமாக ஒற்றை செங்கலை கையில் எடுத்து அவர் செய்த சம்பவங்கள் அனைவராலும் மறக்க முடியாது. தொகுதிக்கு சென்று ஓட்டு கேட்காமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏவானார். 

எம்.எல்.ஏ ஆனவுடன் மக்களுக்கான பணிகளை விரைந்து முடித்து பாராட்டுகளை பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல பொறுப்புகளை உதயநிதிக்கு வழங்கி அவற்றை திறம்பட செய்து முடித்து அனைவரிடத்திலும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே சமயம் பல மாதங்களாக உதயநிதி அமைச்சராக போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இதோ திமுக அரசு பொறுப்பேற்று 17 மாதங்கள் கழித்து இன்றைய தினம் அமைச்சராக பதவியேற்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

அமைச்சராக சாதிப்பாரா? 

இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உதயநிதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அவர் நிச்சயம் கட்சி மட்டுமல்லாமல், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Embed widget