மேலும் அறிய

TVK Vijay: மாணவர்களுக்காக த.வெ.க தலைவர் விஜய் போட்ட ட்வீட்! தம்பி, தங்கை என சொல்லி மனதை டச் செய்த தளபதி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பொதுத் தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித் தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

மாநிலம் முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் 4,107 தேரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முறைகேடுகளை தடுக்கவும் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 304 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து:

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்"என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க

TN 12th 2024: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

ஆன்லைன் படிப்புகளுக்கு தகுதியான 80 பல்கலைக்கழகங்களை அறிவித்த யுஜிசி: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
Vijay Tvk:
Vijay Tvk: "அவர்களே இவர்களே” சொல்லல, நிர்வாகிகள் பேர மறந்துட்டாரா? தவெக தலைவர் விஜய் மீது தொடங்கிய அட்டாக்..!
Tamilisai On Vijay:
Tamilisai On Vijay: "உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும்” பாஜக மீது அட்டாக்? விஜயை பாராட்டிய தமிழிசை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?Sellur Raju  | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
Diwali Special Bus: கிளம்புங்க! இன்று முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இத்தனை பேருந்துகளா?
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
TVK Maanadu: தவெக மாநாடு! விஜய்யின் டாப் 5 அரசியல் நிலைப்பாடுகள் இதுதான் - ஓர் அலசல்
Vijay Tvk:
Vijay Tvk: "அவர்களே இவர்களே” சொல்லல, நிர்வாகிகள் பேர மறந்துட்டாரா? தவெக தலைவர் விஜய் மீது தொடங்கிய அட்டாக்..!
Tamilisai On Vijay:
Tamilisai On Vijay: "உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும்” பாஜக மீது அட்டாக்? விஜயை பாராட்டிய தமிழிசை
Breaking News LIVE 28th OCT 2024:
Breaking News LIVE 28th OCT 2024: "விஜய் கொள்கையும் எங்க கொள்கையும் ஒத்துப்போகல.. தவெகவுடன் கூட்டணி கிடையாது" - சீமான்
Rohit Kohli: தொடர் தோல்வி.. பறிக்கப்பட்ட ரோகித், கோலியின் சலுகைகள் - கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கை
Rohit Kohli: தொடர் தோல்வி.. பறிக்கப்பட்ட ரோகித், கோலியின் சலுகைகள் - கவுதம் கம்பீர் அதிரடி நடவடிக்கை
Mahindra XUV3XO EV: மஹிந்திரா  XUV400 ஐ விட மலிவு விலையில் சந்தைக்கு வரும் XUV3XO EV - கவர்ச்சிகரமான அம்சங்கள் என்ன?
Mahindra XUV3XO EV: மஹிந்திரா XUV400 ஐ விட மலிவு விலையில் சந்தைக்கு வரும் XUV3XO EV - கவர்ச்சிகரமான அம்சங்கள் என்ன?
TN Headlines: கோலாகலமாக நடந்த விஜய்யின் மாநாடு! த.வெ.க. கொள்கைகள், திட்டங்கள் அறிவிப்பு!
TN Headlines: கோலாகலமாக நடந்த விஜய்யின் மாநாடு! த.வெ.க. கொள்கைகள், திட்டங்கள் அறிவிப்பு!
Embed widget