மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!
கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.
இதற்காக விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். இன்று மாலை 3 மணிக்கு குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு தொடங்க உள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்லும் விஜய்க்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தவெக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் இருந்து விஜய் 10 மணிக்கு புறப்படுவார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் விஜய் கோவையில் ரோடு ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க இருக்கும் ஹோட்டல் வரை ரோடு ஷோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கு மாலை 3 மணிமுதல் 7 மணிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடம் கல்லூரி வளாகம் என்பதால் விஜய் பேசுவதை மட்டும் நேரலையில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களாக தொகுதி வாரியாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி இன்று 9 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மீதமுள்ள 9 மாவட்ட நிர்வாகிகள் நாளை பங்கு பெறுகின்றனர். இன்று மட்டும் 700 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக அவரின் பாதுகாப்புக்காக வரும் துபாய் பவுன்சர்களும் இன்று அவருடன் வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















