TVK Vijay: விஜய் மக்கள் சந்திப்பு! எந்த மாவட்டங்கள் எப்போது சந்திக்கிறார்.. நேரமும் இடமும் இதோ
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நாளை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நாளை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த மாவட்ட வாரியாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எப்போது யாரை எல்லாம் சந்திக்கிறார் என்பதை கீழே காணலாம்
திருச்சியில் தொடங்கும் மக்கள் சந்திப்பு
முதலாவது நிகழ்ச்சி திருச்சியில் நடைபெறுகிறது.
-
நேரம்: காலை 10.35 மணி
-
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழு:
T. கரிகாலன், M. சந்திரா, M. விக்னேஷ், P. ஜெகன் மோகன், M. ரவிசங்கர், K. அருள்ராஜ், M. செந்தில் ஆகியோர் பொறுப்பாக உள்ளனர்.
மக்கள் அதிக அளவில் திரண்டு தலைவரை நேரில் காணப்போகிறார்கள் என்பதால், நகரம் முழுவதும் போஸ்டர்கள், பதாகைகள், கொடிகள் மூலம் விழாக்கோலம் சூழ்ந்துள்ளது.
அரியலூரில் பிற்பகல் நிகழ்ச்சி
அரியலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது.
-
நேரம்: பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை
ஏற்பாட்டாளர்கள் குழு:
M. சிவகுமார், K. ரவிக்குமார், V. திருத்தணி முருகன், P. சித்திரக் கண்ணன், V. பிரவீன் குமார் ஆகியோர் ஏற்பாடுகளை கவனிக்கின்றனர்.
இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைவரை காண மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பலூரில் நிறைவு நிகழ்ச்சி
நாளைய சுற்றுப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நடைபெறுகின்றன.
-
இடம் 1: குன்னம் பேருந்து நிலையம் அருகில்
நேரம்: மாலை 4.00 மணி -
இடம் 2: வானொலித் திடல், பெரம்பலூர்
நேரம்: மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
ஏற்பாட்டாளர்கள் குழு:
K. சிவக்குமார், T. ஆரோக்கியசாமி, T. தர்மேந்திரன், A. சின்னதுரை, S.P. வினோத், N. வில்லு விஜய், R.P. மகேந்திரன், S. மோகன்ராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளன.
நிபந்தனைகள்
இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.






















