மேலும் அறிய

Aadhav Arjuna: ஜெயலலிதாவின் திமுக எதிர்ப்பு.. பிரமிப்பா இருக்கு.. ஆதவ் அர்ஜூனா புகழாரம்!

ஒரு சராசரி அரசியலில் இருந்து நேரடி அரசியலுக்கு வரும்போது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பார்க்கும்போது எப்படி ஜெயலலிதா திமுகவை எதிர்த்து 30-40 வருஷம் அரசியல் பண்ணினார் என நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.

திமுகவை எதிர்த்து ஜெயலலிதா எப்படி தாக்குப்பிடித்தார் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஆதவ் அர்ஜூனாவிடம் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களைக் காட்டி கருத்து கேட்கப்பட்டது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றது.

இதுதொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜூனா, “எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். விளையாட்டுத்துறை விடுதியில் இவர் கொண்டு வந்த திட்டங்களின் கீழ் தான் படித்தேன். எப்போவாவது நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தருவார். நான் ஜெயலலிதாவை ஒருமுறை தான் வாழ்க்கையில் பார்த்துள்ளேன். அப்படியாக ஒருமுறை நேரு மைதானத்திற்கு வந்தபோது நான் விளையாட்டு விடுதியில் கேப்டனாக இருந்தேன். ஜெயலலிதாவைப் பார்க்க நான் வரிசையில் நின்றிருந்தேன். எல்லோரையும் பார்த்தார்.

எங்களிடம் சாப்பாடு எல்லாம் நன்றாக கிடைக்கிறதா என கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள் எது கேட்டாலும் ஜெயலலிதா மீதிருந்த பயத்தால் எங்களிடம் எது கேட்டாலும் நன்றாக இருக்கிறது என சொல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் உணவுக்கு நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு ரூ.80 ஒதுக்கப்பட்டிருந்தது.  என்னென்ன உணவுகள் கொடுக்கிறீர்கள் என கேட்டார்கள். நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. 

இதன்பின்னர் சில நிமிடங்கள் எங்களை எல்லாம் பார்த்து அவரே நிலைமையை உணர்ந்தார். தொடர்ந்து எவ்வளவு மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள் என கேட்டார். நாங்கள் காலையில் 3 மணி நேரம் மாலையில் 4 மணி நேரம் என கிட்டதட்ட 7-8 மணி இருப்போம் என சொன்னோம். 

அப்படியா என கேட்டுவிட்டு இதற்கு எப்படி இந்த உணவு முறை பத்தும் என கூறிவிட்டு சென்று விட்டார். அதிலிருந்து இரண்டாவது நாள் எங்கள் உணவுக்கான பணம் 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. மேலும் நாங்கள் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். கரூர் சம்பவம், வழக்குகள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது, அனுமதி பெற முடியாமல் இருப்பது என பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். ஒரு சராசரி அரசியலில் இருந்து நேரடி அரசியலுக்கு வரும்போது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பார்க்கும்போது எப்படி ஜெயலலிதா திமுகவை எதிர்த்து 30-40 வருஷம் அரசியல் பண்ணினார் என நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. டெல்லி அரசியலை எதிர்த்து மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் அவர் மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு மகத்தானது. அண்ணாவுக்கு அப்புறம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தான் பிடித்த ஆளுமை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget