மேலும் அறிய
Advertisement
Tsunami 19th Anniversary: ஆண்டுகள் பல கடந்தும் கரையாத சோகம் - கடலூர் கடற்கரையில் கண்ணீர் வடித்த மீனவ பெண்கள்
சுனாமி தினம் அனுசரிப்பை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கடற்கரையில் மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி பேரலை தாக்கியது.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்களும் பெரிதும் சேதத்தை சந்தித்தன. இப்பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர் 40 பேர் மாயமாகினர். கடலோர கிராமங்கள் அழிந்தன.
19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கடலூர் சிங்காரத்தோப்பு பாலத்தில் இருந்து சோனங்குப்பம் கடற்கரை வரை ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி இறந்தவர்கள் நினைவாக மெழுகுவர்த்தி எந்தி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கால் பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
அதிமுக வடக்கு மாவட்ட கழகம் மீனவர் அணி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும் கடலில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு குடியிருப்புகள் கட்டிக் கொடுத்த நிலையில் அந்த இடங்களுக்கான பட்டா 19 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை, அதனை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பெரும் துயர சம்பவத்தை நினைவு கூறும் விதமாக மீனவர்கள் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சுனாமி தினம் அனுசரிப்பை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion