நீர்வரத்து குறைந்ததால் ஒக்கேனக்கல் அருவியில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் தொடங்கிய குதூகலம்..
நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை என்ன குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைவு-நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 6,000 கன் அடியிலிருந்து 11,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் தொடர்ந்து மழை குறைந்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்துள்ளது. இதையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் இரண்டு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கினார். தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், காவிரி ஆற்றங்கரையோரமுள்ள ஒகேனக்கல், ஆலம்பாடி, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இராணுவ நாட்களுக்கு பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்ககயுள்ளதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி பகுதிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் குறைந்த தண்ணீர் வந்தாலும் கூட, பரிசல் இயக்க தடை விதிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பரிசில் ஓட்டிகள், பரிசல் இயக்காமல் இருந்து வருகின்றனர்.
மேலும் கடந்த 38 ஆண்டுகளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கி வருவதாகவும், ஆற்றில் தண்ணீர் சிறிதளவு அதிகரித்தாலும் பரிசல் இயக்க தடை விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாந்து செல்வதுடன், தங்கள் வருவாயும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறை கூறுகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் பரிசல் ஓட்டிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்