Morning Headlines: பொங்கல் பரிசு.. கரும்பு கொள்முதல்.. கடத்தப்பட்ட இந்தியர்கள்.. முக்கியச் செய்திகள் இன்று
Morning Headlines January 6: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பொங்கல் பரிசு: விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல்.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க..
- 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கோலாகமாக தொடங்கியது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி தான். வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றது. மேலும் படிக்க..
- திரையுலகம் சார்பில் இன்று பிரமாண்டமாக நடக்கும் “கலைஞர் 100” விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் “கலைஞர் 100” (Kalaingar 100) நிகழ்ச்சி இன்று மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதி செய்த மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் படிக்க..
- அயோத்தி ராமர் கோயிலில் வைப்பதற்காக தயாரான 450 கிலோ டிரம்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் படிக்க..
- கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்ட கடற்படை.. நடந்தது என்ன?
சோமாலியா கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 பேர் சென்ற சரக்கு கப்பலை கொள்ளையர்கள் கடத்தி சென்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..