Morning Headlines: பெட்ரோல், டீசல் இல்லா வாகனங்கள்.. தலைமை நீதிபதி அறிவுரை.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines April 2: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

- விசாரணை அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் - தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை
நாட்டின் விசாரணை அமைப்புகள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து, தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார். சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் முதல் இயக்குனரான, டிபி கோஹ்லியின் 20ம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய அவர், “முதன்மை விசாரணை அமைப்புகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் தங்கள் போர்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் படிக்க..
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, அழிக்கப்பட்டுவிடும் - வாகை சந்திரசேகர்
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகரும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளருமான வாகை சந்திரசேகர் மேலப்பாளையம் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுவையில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டு இருக்கிறார். அதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் ஒரு ஆட்சி வேண்டும். மேலும் படிக்க..
- கச்சத்தீவு விவகாரம் - 2015ல் சொன்னதை மாற்றி பேசும் மத்திய அரசு? எல்லாமே தேர்தல் நாடகமா?
கச்சத்தீவு விவகாரத்தில் 2015 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட, ஆர்டிஐ தொடர்பான பதில்களில் பல முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் சரமாரியாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. முதற்கட்டமாக தம்ழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது தொடர்பாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பல்வேறு தகவல்களை பெற்று வெளியிட்டார். மேலும் படிக்க..
- அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ண கோரிக்கை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், VVPAT வாக்குச் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க..
- இந்தியாவில் பெட்ரோல் -டீசல் இல்லா வாகனங்களை 100 சதவீதம் கொண்டுவர முடியும் - மத்திய அமைச்சர்
இந்தியாவில் பெட்ரோல் -டீசல் இல்லா வாகனகங்ளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியம் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். உலகில் அதிகளவில் வாகனங்கள் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் படிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

