Top 10 News Headlines: புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. திருப்பதி முறைகேடு- தவெக நிர்வாக குழு கூட்டம்- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Oct 29th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

ஆலோசனைக் கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.29) மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறும்
கரையை கடந்த மோன்தா
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று(அக்.29) அதிகாலை கரையை கடந்ததுமொந்தா புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
ஆப்பிள் புதிய சாதனை:
$4 ட்ரில்லியன் (ரூ.352.8 லட்சம் கோடி) சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்து Apple புதிய சாதனை படைத்துள்ளது. Microsoft மற்றும் Nvidia ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை அடைந்த 3வது உலக நிறுவனம் என்ற பெருமையை பெற்றது Apple./
தவெக அன்றாடப் பணி - குழு அமைப்பு
தவெக அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட குழுவை நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பீகார் தேர்தல்
பீகாரில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை - மகாகத்பந்தன் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடுபிகாரில் ஆட்சி அமைந்ததும் 20 நாட்களில் சட்டம் இயற்றப்படும்; பிகாரில் பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்படும் - மகாகத்பந்தன் (காங் கூட்டணி) தேர்தல் அறிக்கை
ப்ரோ கபடி லீக்:
ப்ரோ கபடி லீக் எலிமினேட்டர் 3 சுற்றில் பலம் வாய்ந்த பாட்னா பைரேட்ஸை 46-39 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி.இன்று டெல்லியில் நடைபெறும் குவாலிஃபயர் 2 சுற்றில் புனேரி பல்தான்ஸை எதிர்கொள்கிறது டைட்டன்ஸ் அணி. வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை எதிர்கொள்ளும்.
திருப்பதி முறைகேடு
திருப்பதி வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கும் சால்வை கொள்முதலில் முறைகேடு -விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவு. ரூ.400 விலையில் கிடைக்கும் ஒரு சால்வையானது ரூ.1300 என்ற விலையில் ரூ.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக புகார்
ஜமைக்காவை தாக்கிய புயல்:
ஜமைக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த மெலிசா புயல். Pray For Jamaica எனப் பதிவிட் அந்நாட்டின் தடகள வீரர் உசேன் போல்ட். சுமார் 295 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், கடல் சீற்றத்தால் வீடுகள், மருத்துவமனைகள் பெரும் சேதம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முதல் அரையிறுதி
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை.
கவுகாத்தி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடக்கம்
மீன்வளத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி மாலை தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும் அன்றைய நாளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்






















