TN Weather Update: வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழை எச்சரிக்கை! இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை? லேட்டஸ்ட் வெதர் அப்டேட்
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்
வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24ஆம் தேதிக்கு பின் மேலும் வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னைக்கான மழை தகவல்:
சென்னையில் நாளை (21-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20-11-2025 முதல் 23-11-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
24-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.





















