TN Urban Election Results 2022 : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : கடலூர் மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்?
TN Urban Local Body Election Results 2022: தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, கடலூர் மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்ற போவது யார்?
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் பெருநகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடலூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து முதல் முறையாக கடலூர் மாநகராட்சி முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு என தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு 45 வார்டுகளில் 152 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் நாளை இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்காக மொத்தம் 286 பேர் போட்டியிட்டனர். நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 1,444,54 வாக்காளர்களில் 98,510 வாக்காளர்களே வாக்களித்தனர் அதாவது கடலூர் மாநகராட்சி தேர்தலில் 68.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குபெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கடலூர் மாநகராட்சியின் வாக்கு எண்ணும் மையமான மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த அறை தேர்தல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளின் கதவு, ஜன்னல்கள் பூட்டப்பட்டு பலகையால் அடைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பு தமிழ்நாடு சிறப்புகாவல் படையை சேர்ந்த போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு அடுத்ததாக அந்த வளாகத்தை சுற்றிலும் ஆயுதப்படை காவலர்களும், வெளிப்புறத்தில் உள்ளூர் காவலர்களும் என மொத்தம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வெளி ஆட்கள் யாரும் செல்லாதபடி தடுப்பு கட்டைகள் கொண்டு அடைத்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு உள்ள சூழலில் கடலூர் மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்ற போவது யார் என மக்களிடையே இருந்த கேள்விக்கான பதில் நாளை தெரிய வர உள்ளது, திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிமுக சார்பில் மேயர் பதவிக்கான வேட்பாளராக 27 ஆவது வார்டில் போட்டியிட்ட சங்கீதா சவுந்தரராஜன் எனக் கூறப்படுகிறது, திமுக சார்பில் 2 ஆவது வார்டில் போட்டியிட்ட கீதா குணசேகரன் அல்லது 20 ஆவது வார்டில் போட்டியிட்ட சுந்தரி ஆகிய இருவரில் ஒருவர்தான் மேயர் வேட்பாளர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது மேலும் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்பதும் தெரியவர உள்ளது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும் https://tamil.abplive.com/