DMK MP Kanimozhi: பிரிட்டிஷ் அரசை எதிர்த்த முதல் ராணி வேலுநாச்சியார்தான்.. ரஜினி டயலாக்கில் கனிமொழி வெளியிட்ட வீடியோ..!
பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று கூறி கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்
குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் அனைத்து மாநிலத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் விடுதலை போராட்டத்தை பறை சாற்றும் வகையில் போராட்ட வீரர்கள் அடங்கிய வாகன ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த வாகன ஊர்திகள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.
தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 வது சுற்று வரை சென்ற நிலையில், வேலுநாச்சியார் வ உசி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊர்திகள் இடம்பெற கோரிக்கை வைத்து பிரமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தமிழ்நாடு ஊர்திகள் இடம்பெறாதது குறித்து காரணங்களை தெரிவித்துவிட்டோம். அதனால் அரசின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை முன்வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்றும் தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பு வாகனம் நிராகரித்துவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனைக்கேட்ட நீதிபதிகள் மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை முதலில் எதிர்த்த ராணி வேலு நாச்சியார்தான் என்று கூறி கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Velu Naachiyar - The first Indian Queen to fight against British#FreedomFighter #TamilLeaders pic.twitter.com/9CW4XtkGcK
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்