(Source: ECI/ABP News/ABP Majha)
Cricket in Olympics: ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் டி20 கிரிக்கெட்; ஒப்புதல் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்
Cricket in Olympics 2028: ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை வரவேற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டினைப் பொறுத்தவரையில், ஐஓசி மூன்று முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. முதலில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழு ஐந்து புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ஐந்து விளையாட்டுகள் கிரிக்கெட், பேஸ்பால், சாப்ட்பால், கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ்" என கூறினார். மேலும் அவர், நாங்கள் அனைத்து விளையாட்டுகளிலும் செய்வது போல் ஐசிசியுடன் இணைந்து பணியாற்றுவோம். எந்த நாட்டின் தனிப்பட்ட கிரிக்கெட் அதிகாரிகளுடனும் நாங்கள் பணியாற்ற மாட்டோம். ஐசிசியின் ஒத்துழைப்புடன் கிரிக்கெட்டை மேலும் பிரபலமாக்குவது எப்படி என்று பார்ப்போம் எனவும் கூறினார். அதேபோல், ஒலிம்பிக்கிற்கு, கிரிக்கெட் வீரர்களுடன் ஈடுபட இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டு பிரபலமடைந்து வருவதை விடவும் கிரிக்கெட் அதிக பிரபலமடைந்துள்ளது.
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash are the five sports submitted by the IOC’s Executive Board to the upcoming IOC Session as additional sports for the Olympic Games Los Angeles 2028. Full release: https://t.co/c97kn8hi6H
— IOC MEDIA (@iocmedia) October 13, 2023
அடுத்த கட்டமாக, அக்டோபர் 14 முதல் 16 வரை மும்பையில் நடைபெறும் 'அமர்வில்' ஐஓசி வாக்களிக்க வேண்டும். LA28 க்கு முன், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஆறு அணிகள் கொண்ட T20 போட்டியை ஐசிசி பரிந்துரைத்தது. பங்கேற்கும் அணிகள், ஐசிசியின் ஆடவர் மற்றும் மகளிர் டி20 தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற அணிகளாக இருக்கும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 இல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் 128 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒருமுறை மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 1900 ஆம் ஆண்டு பாரிஸில், ஒரே ஒரு போட்டியில் பிரிட்டன் பிரான்சை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. அப்போது, இந்த ஆட்டம் இரண்டு நாட்களுக்கு மேல் விளையாடப்பட்டது மற்றும் முதல் தர போட்டி போன்ற நான்கு இன்னிங்ஸ்களைக் கொண்டது அதாவது டெஸ்ட் போட்டி போன்று நான்கு இன்னிங்ஸ்கள் விளையாடப்பட்டுள்ளது.